அதிர்ஷ்டமா, சாமர்த்தியமா: நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன் (Video)

அதிர்ஷ்டமா, சாமர்த்தியமா: நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன் (Video)

By Bella Dalima

14 Nov, 2017 | 4:11 pm

நோர்வேயில் சாலையைக் கடக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த டேஷ் கெமராவில் இந்த காட்சி பதிவாகியிருந்தது.

சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதனை நோர்வே பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பாடசாலைப் பேருந்தில் இருந்து இறங்கும் சிறுவர்கள், பேருந்து கிளம்பும் முன்பே, அதன் பின் பகுதியில் இருந்து சாலையைக் கடக்க முயல்கின்றனர்.

மறுபுறம் எதிர் திசையில் இருந்து என்ன வந்து கொண்டிருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியாது.

கண் இமைக்கும் நேரத்தில் எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த டிரக்கும், சிறுவர்களும் மிக நெருக்கத்தில் சந்திக்க, ஒரு சிறுமி, பின் பக்கம் ஓடி தப்பிக்க, மற்றொரு சிறுவனின் நிலைமை ஒரு சில நொடிகளில் முடிந்து போகுமோ என்று மனது துடிக்கும் போது, டிரக் ஓட்டுநர் அசாத்தியமான முறையில் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்துகிறார்.

வாகனமும் எதிர்பாராத பிரேக்கினால் குலுங்கி நிற்கிறது. இதில் அந்த சிறுவனின் சாமர்த்தியத்தையும் நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு நொடியும் யோசிக்காமல், வலது பக்கமாக தொடர்ந்து ஓடாமல் இருந்திருந்தால், பிரேக்கிற்கும் வாகனத்தின் வேகத்திற்கும் இடைப்பட்ட நொடிகளில் எல்லாம் முடிந்திருக்கும்.