யாழ். பல்கலைக்கழக பீடங்கள் மூன்றின் கல்வி நடவடிக்கைகள் கால வரையறையின்றி இடைநிறுத்தம்

யாழ். பல்கலைக்கழக பீடங்கள் மூன்றின் கல்வி நடவடிக்கைகள் கால வரையறையின்றி இடைநிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

31 Oct, 2017 | 6:53 pm

யாழ். பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் கால வரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் வணிக முகாமைத்துவ பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் கால வரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை கற்றல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கப் போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைத்து யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் நிர்வாக நடவடிக்கைகளும் இரண்டாவது நாளாக இன்றும் முடக்கப்பட்டிருந்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்