பப்புவா நியூகினியா தடுப்பு முகாம் மூடப்பட்டது: அகதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

பப்புவா நியூகினியா தடுப்பு முகாம் மூடப்பட்டது: அகதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

பப்புவா நியூகினியா தடுப்பு முகாம் மூடப்பட்டது: அகதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

எழுத்தாளர் Bella Dalima

31 Oct, 2017 | 9:21 pm

பப்புவா நியூகினியா தடுப்பு முகாம் மூடப்பட்டமைக்கு எதிராக அகதிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் முகாம் வளாகத்தில் இருந்து வௌியேறியதை அடுத்து தமது உடைமைகள் உள்ளூர்வாசிகளால் சூறையாடப்பட்டதாக அகதிகள் தெரிவித்துள்ளனர்.

அகதிகள் முகாம் மூடப்படுமாயின் அது மனித உரிமைகளை மீறும் நடவடிக்கை என அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

படகு மூலம் சென்று அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் அகதிகள் பப்புவா நியூகினியாவின் மனூஸ் தீவுகள் மற்றும் நாவுரு தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுவது வழமை.

பப்புவா நியூகினியா முகாம் சட்டத்திற்கு முரணான வகையில் அமைக்கப்பட்டுள்ளதென பிராந்திய நீதிமன்றம் தெரிவித்து அதனை மூடுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தடுப்பு முகாம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

இந்ந நிலையில், முகாம் மூடப்படுவதால் நீர், மின்சாரம் என்பவற்றுடன் பாதுகாப்பும் மறுக்கப்படுகின்றமை தமது மனித உரிமைகளை மீறும் நடவடிக்கை என அகதிகள் தெரிவித்துள்ளனர்.

பப்புவா நியூகினியாவின் மனூஸ் தீவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமில் 600 க்கும் அதிகமான அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனூஸ் தடுப்பு முகாம் 2001 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு 2008 இல் மூடப்பட்டதுடன், 2012 இல் மீண்டும் திறக்கப்பட்டது.

2013 முதல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 6 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்