பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமுள்ள வலயங்களில் 29,000 இற்கும் அதிக கட்டடங்கள்

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமுள்ள வலயங்களில் 29,000 இற்கும் அதிக கட்டடங்கள்

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமுள்ள வலயங்களில் 29,000 இற்கும் அதிக கட்டடங்கள்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2017 | 7:23 am

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமுள்ள வலயங்களில் 29,000 அதிக கட்டடங்கள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களில் கட்டடங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

200 இற்கும் அதிக மழை மானிகளை தேவைப்படும் மாவட்டஙகளுக்கு அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று மற்றும் நாளை மழை வீழ்ச்சி அதிகரிப்பதனால் மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களுக்கு அதிகாரிளை அனுப்பி வைப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிலையம் தீர்மானித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்