நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  மீண்டும் விசாரணைக்கு

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  மீண்டும் விசாரணைக்கு

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  மீண்டும் விசாரணைக்கு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2017 | 1:40 pm

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அடுத்த மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சட்ட மாஅதிபர் திணைக்களத்தால், பிரதிவாதிகளிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.

நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமானது என கூறப்படும் கவர்ஸ் கோப்பரேற் கம்பனி வேறொரு கம்பனியுடன் செய்துக்கொண்ட கொடுக்கல் வாங்கல்களில் தவறான முறையில் 30 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டமை தொடர்பில் நிதிதூய்தாக்கல் சட்டத்திற்கமைய பிரதிவாதிகளுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும், அவரின் செயலாளர் என கூறப்படும் ஒரனெல்லா இறேஷா சில்வாவும் நீதிமன்றில் ஆஜராகினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்