மென்பானங்களில் 6 கிராமிற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் சீனிக்கு வரி அறவிட தீர்மானம்

மென்பானங்களில் 6 கிராமிற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் சீனிக்கு வரி அறவிட தீர்மானம்

மென்பானங்களில் 6 கிராமிற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் சீனிக்கு வரி அறவிட தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2017 | 10:08 am

மென்பானங்களில் ஆறு கிராமிற்கும் அதிகளவில் சீனி சேர்கப்படுமாயின் மேலதிக ஒவ்வொரு கிராமிற்கும் ஒரு ரூபா வீதம் வரி அறவிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனியின் நுகர்வை கட்டுப்படுத்தும் நோக்குடன் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியும் இதற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சீனியின் அளவை அறிந்துக் கொள்வதற்கு ஏற்கனவே போத்தல்களில் வர்ணக்குறியீடுகள் ஒட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு தாதியர் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது 1400 தாதியர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்