முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2017 | 7:38 pm

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 27 வருடங்களாகின்ற நிலையில், இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ். ஐந்து சந்திப் பகுதியில் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தை யாழ். மாவட்ட முஸ்லிம் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்றுவரை தமது மீள்குடியேற்றத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்ட இடத்திற்கு சென்றிருந்த வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அவர்களுடன் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சில வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்