மஹிந்தானந்த அலுத்கமகேயின் கடவுச்சீட்டை  நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

மஹிந்தானந்த அலுத்கமகேயின் கடவுச்சீட்டை  நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

மஹிந்தானந்த அலுத்கமகேயின் கடவுச்சீட்டை  நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2017 | 12:17 pm

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் கடவுச்சீட்டை இன்றைய தினத்திற்குள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 5 கோடியே 35 இலட்ச ரூபா பணத்தை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கிற்கு அவர் இன்று ஆஜராகாமையால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கின் முதலாவது சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே, பாராளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொள்ள உள்ளதால் நீதிமன்றத்திற்கு ஆஜராக முடியாதுள்ளதாக அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்ததை அடுத்து, கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபர் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் களஞ்சிய கட்டுப்பாட்டாளரான அஜித் நிஷாந்த ஆவார்.

வழக்கு விசாரணை டிசம்பர் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்