மண்சரிவு அபாயமுள்ள பகுகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

மண்சரிவு அபாயமுள்ள பகுகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

மண்சரிவு அபாயமுள்ள பகுகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2017 | 11:02 am

மலைநாட்டில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமாயின் மண்சரிவு அபாயமுள்ள பகுகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாயம் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, மாத்தளை, இரத்தினப்புரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவிலும், கண்டி மாவட்டத்தின் மெத தும்புர மற்றும் உடு தும்புர பிரதேச செயலாளர் பிரிவிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் யட்டவத்த பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாவலப்பிட்டி தலவாக்கலை வீதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 12 குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

ஹங்குரங்கெத்த பகுதியில் 17 குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், பதுளை ஹல்தமுல்ல பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதால் 6 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்