நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2017 | 6:53 pm

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், இன்றைய விசாரணையின் போது சட்டத்தரணிகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இன்று மன்றில் ஆஜராகவில்லை.

இதனை அடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கடந்த இரண்டு தடவைகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி நல்லூர் பின் வீதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்