திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு என்ன?

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு என்ன?

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2017 | 10:00 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் திருகோணமலை துறைமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

கேள்வி: பிரதமரே இந்தியாவிற்கு திருகோணமலை துறைமுகத்தினை வழங்குவது தொடர்பில் ஏதாவது உடன்படிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளனவா?

பிரதமர்: இல்லை. இந்தியாவிற்கு திருகோணமலை துறைமுகத்தினை வழங்க வேண்டிய அவசியமில்லை. திருகோணமலை துறைமுகத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்த நாட்டினாலும் மேற்கொள்ள முடியும். தற்போது நாம் எரிபொருள் தாங்கிகள் தொடர்பிலே பேசுகின்றோம். வங்காளவிரிகுடாவில் 40 வீதம் இந்தியாவின் நிர்வாகத்தின் கீழே உள்ளது. தேவைப்படின் இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வந்து திருகோணமலையில் இறக்கி வௌிநாடுகளுக்கு அனுப்புவதில் பிரச்சினை இல்லை.

04.02.2016 அன்று பிரதமர் தெரிவித்ததாவது,

[quote]திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக சிங்கப்பூர், ஜப்பான், இந்தியாவுடன் நாம் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளோம். வட மாகாணத்திலும் விவசாயம், மற்றும் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்து வடக்கு வலயத்தில் விசேட திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். யுத்தம் காரணமாக அங்கு பொருளாதாரம் அழிவடைந்துள்ளது.[/quote]

பிரதமர் முன்பு இதுபற்றித் தெரிவித்திருந்ததாவது,

[quote]இன்னும் சில நாட்களில் சீனா, இந்தியா, சிங்கப்பூரின் சந்தைகள் இங்கு நிறுவப்படும். இந்திய முதலீடுகள் தொடர்பில் தற்போது பேசுகின்றோம். திருகோணமலை துறைமுகத்தை இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு பாரிய நிதி கிடைக்கவுள்ளது. ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அடுத்த சில வருடங்களுக்கான பொருளாதார நிகழ்ச்சி நிரலொன்றைத் தயாரிக்கவுள்ளோம்.[/quote]

பிரதமரின் நிலைப்பாடு என்ன?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்