கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயன்ற 6 பேருக்கு பத்தரை வருட சிறைத்தண்டனை

டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயன்ற 6 பேருக்கு பத்தரை வருட சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2017 | 7:04 pm

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயன்ற 6 பேருக்கு பத்தரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எமில் காந்தன் உள்ளிட்ட 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலைக்குள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் கூரான ஆயுதமொன்றினால் படுகாயம் ஏற்படுத்தியமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தண்டனை விதிக்கப்பட்ட 6 குற்றவாளிகளில் ஒருவர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தார்.

ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்து தண்டனையை அமுல்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி 1998ஆம் ஆண்டில் தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறை சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த காலப்பகுதியில் அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தா, கைதிகளை சந்திப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்றிருந்தபோது தாக்கப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்