ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு பிரிட்டனின் குட்டி இளரவசர் ஜோர்ஜ்

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு பிரிட்டனின் குட்டி இளரவசர் ஜோர்ஜ்

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு பிரிட்டனின் குட்டி இளரவசர் ஜோர்ஜ்

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2017 | 3:38 pm

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொலைப்பட்டியலில் பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜோர்ஜ் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் – கேத் மிடில்டன் தம்பதியின் 4 வயது மகனும் குட்டி இளவரசருமான ஜோர்ஜின் பெயர் ஐ.எஸ். கொலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்கள் சமூக வலைத்தளத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த மிரட்டல் செய்தி அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்பினரின் அடுத்த இலக்கு குட்டி இளரவசர் ஜோர்ஜ் என்பது இந்த செய்தியின் மூலம் உறுதியாகியுள்ளது என புலனாய்வு வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த மிரட்டலையடுத்து, குட்டி இளவரசர் படிக்கும் பாடசாலைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்