அரியாலையில் இளைஞர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்புள்ளதாக சந்தேகம்

அரியாலையில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்புள்ளதாக சந்தேகம்

அரியாலையில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்புள்ளதாக சந்தேகம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2017 | 12:35 pm

யாழ். அரியாலை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் விசேட அதிரடிப்படையினர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத் தினத்தன்று இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்த முச்சக்கர வண்டி மற்றும் சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளை அடுத்து இந்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நேற்று முன்தினம் (28) குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றனர்.

பொலிஸ் மாஅதிபரின் பரிந்துரைக்கு அமைய குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணகள் கையளிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும் இதுவரையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

யாழ்ப்பாணம் அரியாலை மணியன் தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதான டொன் பொஸ்கோ றிக்மன் என்ற இளைஞன் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

தனது நண்பனுடன் உதயபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் மோட்டார் சைக்கிளின் பின் புறமாக அமரந்து பயணித்த போது இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது படுகாயமடைந்த பொஸ்கோ றிக்மன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டு காயத்தினால் ஏற்பட்ட அதிக குருதிப்போக்கே இவரது மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்