அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய வழக்கிலிருந்து கருணா விடுவிப்பு

அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய வழக்கிலிருந்து கருணா விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2017 | 6:22 pm

அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாகனம் அரசினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க விரும்பவில்லை என சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, விநாயகமூர்த்தி முரளிதரனை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட 9 கோடி ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத சொகுசு ஜீப் வண்டியொன்றை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதன் பின்னரும் மீள கையளிக்காமை தொடர்பில் கருணா அம்மான் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்