அடுத்த வருடம் முதல் சவுதியில் பெண்களுக்கு விளையாட்டு மைதானங்களுக்கு செல்ல அனுமதி

அடுத்த வருடம் முதல் சவுதியில் பெண்களுக்கு விளையாட்டு மைதானங்களுக்கு செல்ல அனுமதி

அடுத்த வருடம் முதல் சவுதியில் பெண்களுக்கு விளையாட்டு மைதானங்களுக்கு செல்ல அனுமதி

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2017 | 11:41 am

சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபிய அரசு நவீன பொருளாதாரத் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

அதற்கான புதியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என கருதுகிறது. அதன்படி பெண்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கடற்கரை ஹோட்டல்களில் பெண்கள் ‘பிகினி’ நீச்சல் உடை அணியவும், வாகனம் ஓட்டவும் மன்னர் சல்மான் அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வழங்கப்படவிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ரியாத், தம்மான், ஜித்தா ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களுக்குள் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் பெண்கள் செல்ல அனுமதிக்கப்பட இருப்பதாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய நாள் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்