தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றம்: இன்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுப்பு

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றம்: இன்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2017 | 8:48 pm

ஹட்டனிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து 5 ஆவது நாளாகவும் மலையகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதன் போது தொழிலாளர் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் , அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் முன்னெடுக்கப்படடது.

இதன் பின்னர் தலவாக்கலை நகரில் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் அமைச்சர் திகாம்பரத்தின் உருவ பொம்மையை எரித்தனர்.

இதேவேளை பசறை நகரிலும் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பசறை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து பேரணியாக சென்றவர்கள் பின்னர் பசறை நகரில் போராட்டத்தில் ஈடுட்டனர்.

இதன்போது அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கொடும்பாவியொன்று போராட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்