எட்டு வருடங்களின் பின்னர் லாகூர் கடாபி மைதானத்தில் மீண்டும் களமிறங்கும் இலங்கை அணி

எட்டு வருடங்களின் பின்னர் லாகூர் கடாபி மைதானத்தில் மீண்டும் களமிறங்கும் இலங்கை அணி

எட்டு வருடங்களின் பின்னர் லாகூர் கடாபி மைதானத்தில் மீண்டும் களமிறங்கும் இலங்கை அணி

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2017 | 3:03 pm

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத பல அனுபவங்களை தந்த பாகிஸ்தான் லாகூர் கடாபி மைதானத்தில் இலங்கை அணி மீண்டும் களமிறங்க தயாராகியுள்ளது.

உலக சம்பியன் பட்டம் , பயங்கரவாத தாக்குதல் என இரு வேறுபட்ட அனுவங்களை லாகூரில் பெற்றுள்ள இலங்கை அணி மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடவுள்ளது.

8 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணி இன்று லாகூரை சென்றடைந்தது.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இரு அணிகளும் பாகிஸ்தானில் இதுவரை எந்தவொரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று மாலை 6.30 இற்கு லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

லாகூர் சென்றுள்ள இலங்கை அணியுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர , கிரிக்கெட் நிறுவனத்தலைவர் திலங்க சுமதிபால ஆகியோரும் சென்றுள்ளனர்.

அபுதாபியில் நடைபெற்ற முதல் இரண்டு சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்