இலங்கைக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2017 | 10:36 pm

இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 03 க்கு பூச்சியம் என கைப்பற்றியது.

மூன்றாவது சர்வதேச இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

பாகிஸ்தான் அணிக்கு பக்கர் சமான் மற்றும் உமர் அமீன் ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 57 ஓட்டங்களை பகிர்ந்த போது பாகிஸ்தான் முதல் விக்கெட்டை இழந்தது.

பக்கர் சமான் 31 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

சவாலாக துடுப்பெடுத்தாடிய உமர் அமீன் அதிரடியாக 45 ஓட்டங்களை பெற்றார்.

மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாடிய சொய்ப் மலிக் 23 பந்துகளில் 51 ஓட்டங்களை விளாசினார்.

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றது.

181 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணி 57 ஓட்டங்களுக்கு முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாற்றமடைந்தது.

என்றாலும் திறமையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தசுன் சானக்க சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் தன்னுடைய கன்னி அரைச்சதத்தை எட்டினார்.

தசுன் சானக்க 54 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க இலங்கை அணியின் வெற்றி கேள்விக்குறியானது.

அணித்தலைவர் திஸ்ஸர பெரேரா 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

போட்டியில் பாகிஸ்தான் அணி 36 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்