யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை பிரிவிற்கு சீல் வைப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை பிரிவிற்கு சீல் வைப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2017 | 6:42 pm

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றின் கண் சத்திரசிகிச்சை பிரிவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேர் கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த போதிலும், மறுநாளே இவர்கள் கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு சுகாதார அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு குறித்த வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக வட மாகாண சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

விசாரணைகள் நிறைவு பெறும் வரை வைத்திசாயலையில் கண் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சத்திர சிகிச்சைப் பிரிவிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நிலையில் தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் நான்கு பேருக்கு நேற்று (27) மீண்டும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிக பணம் செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் இதுவரையில் தனியார் வைத்தியசாலையின் நிர்வாகம் உரிய பதிலை வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள குறித்த தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பி.கேசவராஜிடம் நாம் வினவியபோது சத்திரசிகிச்சையின் போது பெறப்பட்ட மாதிரிகள் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆய்வு அறிக்கை கிடைத்ததன் பின்னர் அது தொடர்பில் தெளிவுப்படுத்தபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்