நவம்பர் முதலாம் திகதி முதல் ரயில் பொதி சேவைக்கான கட்டணம் 50 வீதத்தால் அதிகரிப்பு

நவம்பர் முதலாம் திகதி முதல் ரயில் பொதி சேவைக்கான கட்டணம் 50 வீதத்தால் அதிகரிப்பு

நவம்பர் முதலாம் திகதி முதல் ரயில் பொதி சேவைக்கான கட்டணம் 50 வீதத்தால் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2017 | 2:07 pm

ரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 50 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் வணிக முகாமையாளர் என்.ஜே. இதிபாலகே தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டிலிருந்து ரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ரயில் கட்டண திருத்தத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்