தொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2017 | 2:43 pm

ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தினை பெயர் மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் கண்டி புசல்லாவ நகரில் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரஜா சக்தி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நிழற்படம் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து டயகம 05 ஆம் பிரிவு தோட்ட மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து மீண்டும் புதிய நிழற்படமொன்று அங்கு வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பண்டாரவளை ஹப்புத்தளை நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹப்புத்தளை, தொட்டலாகல, தங்கமலை, காகொல்ல, ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்