வங்கிகளின் மூலதனத் தேவையை அதிகரிக்க மத்திய வங்கி நடவடிக்கை

வங்கிகளின் மூலதனத் தேவையை அதிகரிக்க மத்திய வங்கி நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2017 | 9:41 pm

இலங்கையில் அனுமதிபெற்ற வங்கிகளின் குறைந்த மூலதன தேவைப்பாட்டை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

வங்கியின் உறுதிப்பாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வதேசத்தரமான Basel Three Frame ஐ செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனுமதி பெற்றவர்கள் உள்நாட்டு வர்த்தக வங்கியொன்றை ஆரம்பிப்பதற்கான குறைந்தபட்ச மூலதனமாக 20 பில்லியன் ரூபா அவசியம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்றவர்கள் உள்நாட்டு விசேட வங்கியொன்றை உருவாக்குவதற்கு 7.05 பில்லியன் ரூபா மூலதனத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

வௌிநாட்டிலுள்ள வங்கியொன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு குறைந்தபட்சம் 10 பில்லியன் ரூபா மூலதனமாக இருத்தல் வேண்டும் எனவும் மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள வங்கிகள் தொடர்பில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த ஆரம்ப மூலதன தேவைப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையிலுள்ள வங்கிக் கட்டமைப்புகள் அபாய நிலையை அடைந்துள்ளதாக சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் எனப்படும் Moody S அண்மையில் இலங்கை தொடர்பில் வௌியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள நிதி நிறுவனங்களை சக்திமயப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மத்திய வங்கி வௌியிட்டுள்ள மூலதன தேவைப்பாட்டை பூர்த்தி செய்ய வேண்டுமெனின், அரச வங்கிகள் எதிர்காலத்தில் ஆரம்ப சந்தைகளுக்குள் பிரவேசிப்பது கட்டாயமாக்கப்படும் என இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்