மீன் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலையில் வீழ்ச்சி

மீன் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலையில் வீழ்ச்சி

மீன் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலையில் வீழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2017 | 3:27 pm

நாட்டில் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் சந்தையில் ஜீலா, நெத்தலி போன்ற சில வகை மீன்களின் விலையில் வீழ்ச்சியேற்பட்டிருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சில மீன் வகைகளின் விலை கிலோ 100 ரூபா அளவில் குறைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், கடற்றொழில் அமைச்சு மற்றும் பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலைய மீன் வியாபாரிகள் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அதன்படி, மீன் விலையை நிலையாகப் பேணும் விதமாக கொப்பரா மற்றும் தலபத் போன்ற மீன் வகைகள் தவிர்ந்த மற்ற மீன் வகைகளின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சினால், பொருளாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரின் மீன் இறக்குமதியையும் தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்