நான் மலையாளி அல்ல, தமிழ் பெண்: தெலுங்கு பத்திரிகையாளர்களிடம் சாய் பல்லவி

நான் மலையாளி அல்ல, தமிழ் பெண்: தெலுங்கு பத்திரிகையாளர்களிடம் சாய் பல்லவி

நான் மலையாளி அல்ல, தமிழ் பெண்: தெலுங்கு பத்திரிகையாளர்களிடம் சாய் பல்லவி

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2017 | 5:41 pm

மலையாளப் படங்களில் நடிப்பதால் ஒரு நடிகையை மலையாளி எனலாமா என சாய் பல்லவி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் பெண்ணான சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாளப் படம் மூலமாக உச்சகட்ட புகழை அடைந்தார்.

தாம்தூம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அவரை உலகுக்குப் பெரிதாக அறிமுகப்படுத்தியது பிரேமம் படம் தான்.

இதன் பிறகு மலையாளப் படமொன்றிலும் தெலுங்கிலும் நடித்துவிட்டார்.

தமிழில் கரு, மாரி – 2 என இரு படங்களில் நடித்து வந்தாலும் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

சமீபத்தில், சாய் பல்லவியை தெலுங்கு ஊடகங்கள் மலையாளி என்று குறிப்பிடுவதால் அவர் வருத்தமடைந்துள்ளார்.

”நான் கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ் பெண், எனவே என்னை மலையாளியாகக் கருத வேண்டாம்,” என தெலுங்கு பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்செய்தி மலையாள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்