சமயப் பாடங்களுக்கு புதிதாக 2,643 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

சமயப் பாடங்களுக்கு புதிதாக 2,643 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

சமயப் பாடங்களுக்கு புதிதாக 2,643 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2017 | 3:44 pm

சமயப் பாடங்களைக் கற்பிப்பதற்கு புதிதாக 2,643 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

சமயம் சார்ந்த பாடநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களையும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சைவ சமயம், கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம் உள்ளிட்ட பாடங்களைக் கற்பிற்கும் ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.

இந்த நியமனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வௌியிடவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்