கொட்டாஞ்சேனையில் கொ​லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை

கொட்டாஞ்சேனையில் கொ​லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை

கொட்டாஞ்சேனையில் கொ​லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2017 | 4:58 pm

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன் துட்டுவவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனையில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், குறித்த இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்