அரியாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

அரியாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2017 | 9:09 pm

யாழ்ப்பாணம் – அரியாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மூன்று குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 1.30 அளவில் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

28 வயதான தாயாரும் ஒன்று, இரண்டு மற்றும் நான்கு வயதான பிள்ளைகளின் சடலங்களுமே மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நால்வருக்கும் நஞ்சூட்டப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

யாழ். தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்