2015 ஆம் ஆண்டில் 9 மில்லியன் பேரின் மரணத்திற்கு காரணமாக அமைந்த சூழல் மாசு

2015 ஆம் ஆண்டில் 9 மில்லியன் பேரின் மரணத்திற்கு காரணமாக அமைந்த சூழல் மாசு

2015 ஆம் ஆண்டில் 9 மில்லியன் பேரின் மரணத்திற்கு காரணமாக அமைந்த சூழல் மாசு

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 7:28 pm

2015 ஆம் ஆண்டு உலகில் நிகழ்ந்த இறப்புகளில் 9 மில்லியன் பேரின் மரணத்திற்கு சூழல் மாசு காரணமாக அமைந்துள்ளதாக “த லென்செட்” மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளதாக பி.சி.சி செய்தி வௌியிட்டுள்ளது.

சூழல் மாசு காரணமாக அதிக இறப்பு ஏற்படும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் நாடுகளில் ஏற்பட்டுள்ள எல்லா இறப்புக்களிலும் 25 சதவீதம் வரையான இறப்புக்கள் மாசுபாடுகளால் நிகழ்ந்திருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதில் பங்களாதேஷ், சோமாலியா ஆகிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

காற்று மாசடைதல் காரணமாக மூன்றில் இரண்டு பகுதியினர் இறந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய ஆபத்திற்குரிய காரணியாக விளங்கும் காற்று மாசினால் 6.5 மில்லியன் பேருக்கு இயற்கை இறப்பிற்கு முன்னதாகவே மரணம் ஏற்படுவதாக பி.பி.சி. செய்தி வௌியிட்டுள்ளது.

வாயுக்கள் போன்ற வெளிப்புற ஆதாரங்கள், விறகு எரிப்பது அல்லது நிலக்கரி பயன்பாடு போன்ற வீடுகளில் இருந்து வெளிவரும் மாசுபாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.

டீசல் வாகனங்கள் நச்சுத்துகள்கள் மற்றும் வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றுவது காற்று மாசுபாட்டில் அதிகப் பங்காற்றும் காரணிகளாக இருக்கலாம்.

இந்த முடிவுகள் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்துள்ளன.

அந்த ஆய்வை நடத்திய ஆசிரியர்கள் தங்களுடைய தரவுகளை விளக்குகின்ற ஊடாடும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையிலும் பல பகுதிகளில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புகை கக்கும் வாகனங்களை இன்றும் காண முடிகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்