உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் சிங்கப்பூர்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் சிங்கப்பூர்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் சிங்கப்பூர்

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 4:37 pm

உலகிலேயே அதிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் விளங்குகிறது.

கனடாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆர்டன் கெப்பிட்டல் என்ற ஆலோசனை நிறுவனம், உலகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், 159 புள்ளிகளுடன் சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதலிடம் வகிக்கிறது.

சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், உலகில் 159 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும். அதோடு, சிங்கப்பூர் கொண்டிருக்கும் சுமூகமான தூதரக உறவுகளும், மிகச்சிறப்பான வெளியுறவுக் கொள்கைகளும் காரணமாக அமைந்துள்ளன.

இதன் காரணமாகவே, முதன்முறையாக ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது.

சமீபத்தில் பராகுவே அரசு, சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இன்றி தங்கள் நாட்டுக்கு வரலாம் என்று அறிவித்ததை அடுத்து, சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்போர் விசா இன்றி செல்லும் நாடுகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்தது.

முன்னதாக முதல் இடத்தில் இருந்த ஜெர்மனி 158 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ஸ்வீடன் மற்றும் தென்கொரியா நாடுகள் 157 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வெளியுறவுக் கொள்கைகளால், 154 புள்ளிகளுடன் அமெரிக்கா பாஸ்போர்ட் 6 ஆவது இடத்தில் உள்ளது.

வெறும் 51 புள்ளிகளுடன் இந்தியா 75 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை இந்தப் பட்டியலில் 36 புள்ளிகளுடன் 89 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

 

TOP 10

  1. Singapore – 159 countries
  2. Germany – 158 countries
  3. Sweden, South Korea – 157 countries
  4. Denmark, Finland, Italy, France, Spain, Norway, Japan, United Kingdom – 156 countries
  5. Luxembourg, Switzerland, Netherlands, Belgium, Austria, Portugal – 155 countries
  6. Malaysia, Ireland, United States of America, Canada – 154 countries
  7. Greece, New Zealand, Australia – 153 countries
  8. Malta, Czechia, Iceland – 152 countries
  9. Hungary – 150 countries
  10. Slovenia, Slovakia, Poland, Lithuania, Latvia – 149 countries

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்