மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்தில் இழுபறி: யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் 

மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்தில் இழுபறி: யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் 

மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்தில் இழுபறி: யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் 

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 10:07 pm

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதில் காணப்படும் இழுபறியைக் கண்டித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எஸ். தவராசா, வட மாகாண சபை உறுப்பினர்களான அயூப் அஸ்மின் , இம்மானுவேல் அர்னோல்ட் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் முஸ்லிம் விவகார, தபால் தொடர்பாடல் அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் ஆகியோரிடம் கையளித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்