மனுதாரர்கள், சாட்சியாளர்களைப் பாதுகாக்க விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்கத் தீர்மானம்

மனுதாரர்கள், சாட்சியாளர்களைப் பாதுகாக்க விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்கத் தீர்மானம்

மனுதாரர்கள், சாட்சியாளர்களைப் பாதுகாக்க விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 3:22 pm

இலஞ்ச முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் மனுதாரர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்கும் சாட்சியாளர்கள் மற்றும் பிரதிவாதிகளுக்கு கொழும்பில் தங்குவதற்கான இடங்கள் இல்லையென ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் பாதுகாப்பான இடமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்