தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் 

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் 

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் 

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 10:09 pm

ஹட்டன் – பூல் பேங்க் பகுதியில் அமைந்திருந்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை பூல் பேங்க் தொழிற்பயிற்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் நகரில் சுமார் இரண்டு மணி நேரம் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முனெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக ஹட்டன் வீதியுடனான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தினை பூல் பேங்க் தொழிற்பயிற்சி நிலையமாக மாற்றியமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் (25) ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஹட்டன் தலைமை பொலிஸ் அதிகாரி மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் உடன் கலந்துரையாடியதன் பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்