தமிழ் அரசியல் கைதி 11 வருட சிறைவாசத்தின் பின் விடுதலை

தமிழ் அரசியல் கைதி 11 வருட சிறைவாசத்தின் பின் விடுதலை

தமிழ் அரசியல் கைதி 11 வருட சிறைவாசத்தின் பின் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 7:39 pm

தமிழ் அரசியல் கைதியான கணகரத்தினம் ஜீவரத்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணகரத்தினம் ஜீவரத்தினம் திருகோணமலையில் கைது செய்யப்பட்டு, 11 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில், சட்ட மா அதிபரினால் 2014 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

தமிழ் அரசியல் கைதியான கணகரத்தினம் ஜீவரத்தினத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று அவர் விடுவிக்கப்படடார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்