கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 3:31 pm

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வட்டுவாகல் பிரதான பாலத்தை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதால், போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு சென்று, மக்களிடம் கலந்துரையாடியிருந்தார்.

இதனையடுத்து, அப்பகுதியிலிருந்து கலைந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நில அளவீட்டுப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளதாக உதவி பிரதேச செயலாளர் தெரிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்