உயிருடன் இருப்பவர்களுக்கு பதாகை வைக்கக்கூடாது: எதிர் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 8:43 pm

உயிருடன் இருப்பவர்களின் நிழற்படங்கள் அடங்கிய பதாகைகளை வைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பதாகைகளை வைப்பதற்கான அனுமதியை வழங்கினாலும், உயிரோடு இருப்பவர்களின் நிழற்படங்கள் இடம்பெறாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி வைத்தியநாதன் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த உத்தரவிற்கு எதிராக சென்னை மாநகராட்சி சார்பில், சட்டத்தரணி விவேகாநந்தனால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அரசியல் கட்சிகள் உயிருடன் இருப்பவர்களின் நிழற்படங்களை பதாகைகளில் பொறிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரால், கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு நீதிபதி வைத்தியநாதனால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்