அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகியன இனி ஆங்கில வார்த்தைகள்: அகராதியில் சேர்த்தது ஆக்ஸ்போர்ட்

அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகியன இனி ஆங்கில வார்த்தைகள்: அகராதியில் சேர்த்தது ஆக்ஸ்போர்ட்

அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகியன இனி ஆங்கில வார்த்தைகள்: அகராதியில் சேர்த்தது ஆக்ஸ்போர்ட்

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 4:51 pm

அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகிய வார்த்தைகள் ஆங்கில வார்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெறுகிறது.

உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தமது அகராதியில் உட்புகுத்துவதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வழக்கமாக செய்து வருகிறது.

மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இவ்வாறான வார்த்தைகளை சேர்க்கும் நடவடிக்கை இடம்பெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு இதுவரை உலகின் பல மொழிகளில் உள்ள சுமார் ஆயிரம் வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பிடித்துள்ளன.

இந்த நிலையில், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் புதிய பதிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

அதில் இந்திய மொழிகளில் இருந்து 70 வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ‘அண்ணா’ என்று மூத்தவர்களை அழைப்பது வழக்கத்தில் உள்ளது.

அதை அப்படியே ஆங்கில வார்த்தையாக இடம்பெறச் செய்துள்ளனர்.

‘அண்ணா’ என்பது ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் அகராதியில் நாணயமான ‘‘அணா’’வை குறிக்கும் பெயர்ச்சொல்லாக உள்ளது. தற்போது அண்ணா 2 (அண்ணன்) என்று குறிப்பிட்டு சேர்த்துள்ளனர்.

அப்பா என்ற உருது வார்த்தையும் ‘‘தந்தை’’யை குறிக்கும் என்று அந்த அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆச்சரியமான தகவல் அல்லது சந்தேகப்படும் படியான தகவலைக் கேள்விப்படும் போது ‘‘அச்சச்சோ’’ என்பார்கள்.

அந்த வார்த்தையும் ஆங்கிலமாக மாறிவிட்டது.

சூரிய நமஸ்காரமும் ஆங்கிலமாகியுள்ளது.

இந்திய மொழிகளில் உள்ள வார்த்தைகளில் தமிழ் மொழியில் உள்ள வார்த்தைகள்தான் அதிக அளவில் ஆங்கிலமாக மாறி ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பிடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்