விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல: பியசிறி விஜேநாயக்க

விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல: பியசிறி விஜேநாயக்க

விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல: பியசிறி விஜேநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2017 | 7:41 pm

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்த கருத்து தமது கட்சியின் நிலைப்பாடு அல்லவென அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.

விமல் வீரவன்ச அண்மையில் பாராளுமன்றத்திற்கு மேலாக சென்று குண்டுத்தாக்கல் மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், அவரது அந்தத் தீர்மானம் தமது அரசியல் குழு மற்றும் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்லவென பியசிறி விஜேநாயக்க குறிப்பிட்டார்.

”பாராளுமன்றத்தின் மீது குண்டுத்தாக்குல் மேற்கொள்வது என்பது ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினையாகும். அது தவறான கருத்து என்பதனை தேசிய சுதந்திர முன்னணி சார்பாக கூற விரும்புகிறேன். எனவே, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேரும் அந்த கூற்று தொடர்பில் கவலையடைகிறோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்