சிலாபத்தில் குளமொன்றிலிருந்து வடிவாம்பிகை சிலை கண்டுபிடிப்பு

சிலாபத்தில் குளமொன்றிலிருந்து வடிவாம்பிகை சிலை கண்டுபிடிப்பு

சிலாபத்தில் குளமொன்றிலிருந்து வடிவாம்பிகை சிலை கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2017 | 2:04 pm

சிலாபத்தில் குளம் ஒன்றிலிருந்து வடிவாம்பிகையின் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத முன்னைநாதஸ்வாமி ஆலயத்திற்கு முன்னால் காணப்படும் குளத்தில் இருந்து ஸ்ரீ வடிவாம்பிகையம்மனின் சிலை ஒன்று நேற்று பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்தை புனரமைப்பு செய்யும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஐந்தரை அடி நீளமான இந்த சிலையில் தலைப்பகுதி உடைந்து வேறாகியுள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சிலை மீட்கப்பட்டதை அறிந்த பிரதேசவாசிகள் சிலையைப் பார்வையிடுவதற்காக வருகை தந்தவண்ணமுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்