கோட்டாபய கடற்படை முகாம் காணியை விடுவித்தால் எலும்புக்கூடுகள் வௌிவரக்கூடும்: சீமான் சந்தேகம்

கோட்டாபய கடற்படை முகாம் காணியை விடுவித்தால் எலும்புக்கூடுகள் வௌிவரக்கூடும்: சீமான் சந்தேகம்

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2017 | 9:46 pm

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தொடர்பில் நியூஸ்பெஸ்ட் அண்மையில் செய்தி வௌியிட்டிருந்தது.

இதன் பின்புலத்தில் ஏதேனும் மர்மங்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அதனை உறுதிப்படுத்தும் விதமான கருத்தொன்றை வௌியிட்டுள்ளார்.

அப்பகுதியில் தமிழ் மக்களின் உடல்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் சந்தேகம் வௌியிட்டுள்ளார்.

மக்களுக்கு நிலத்தை விடுவித்தால் அவர்கள் தமது தேவைகளுக்காக நிலத்தைத் தோண்டும் போது புதைத்து வைக்கப்பட்டுள்ள உடல்கள், எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் போன்றவை வௌிவரும் என்ற அச்சத்திலேயே இலங்கை அரசாங்கம் அதனை விடுவிக்காதிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்