விபத்தில் சிக்கியவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாததால் உயிரிழப்பு?

விபத்தில் சிக்கியவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாததால் உயிரிழப்பு?

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2017 | 6:43 pm

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் மலைத்தோட்டத்தில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு தோட்ட வைத்தியசாலை முறையான சிகிச்சை வழங்கவில்லை என தெரிவித்து நேற்று (24) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிரேட்வெஸ்டன் மலைத்தோட்டத்தில் வசிக்கும் 40 வயதான லெட்சுமன் என்ற நபர் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து, லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

எனினும், முதலில் கிரேட்வெஸ்டன்மலை தோட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாமையினாலேயே அவர் உயிரிழந்ததாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வைத்தியசாலையின் அசமந்தப் போக்கைக் கண்டித்து தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் தோட்ட முகாமையாளரிடம் நியூஸ்பெஸ்ட் தொடர்பு கொண்டு வினவிய போது, அவர் கிரேட்வெஸ்டன் மலை தோட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டபோதே உயிரிழந்திருந்ததாகவும் தோட்ட அம்பியூலன்ஸ் வண்டி இயந்திரக்கோளாறு காரணமாக இயங்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், லிந்துலை வைத்தியசாலையில் இது தொடர்பில் வினவியபோது, குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்