கிராம மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டம்

கிராம மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டம்

கிராம மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2017 | 11:11 am

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை அரிசியை நாடு முழுவதுமுள்ள லங்கா சதோச விற்பனை நிலையத்திற்கு விநியோக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒரு இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியில், 10,000 மெற்றிக் தொன் அரசி இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசியை லங்கா சதோச ஊடாக நுகர்வோர் 74 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கிராம மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக சதொச தலைவர் டி.எம்.கே.பி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்