காடுகளை அழிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

காடுகளை அழிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

காடுகளை அழிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2017 | 7:43 am

காடுகளை அழிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற, ஆசிய பசுபிக் வலய வனப் பரம்பல் தொடர்பான ஆணைக்குழுவின், 27ஆவது அமர்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வன முகாமைத்துவம் செய்வதற்கான வழிமுறைகளை தயாரித்தல், வலய வனாந்தர மற்றும் நிலப்பரப்பு மறுசீரமைப்பிற்கான உத்திகளை அங்கீகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டன.

ஆசிய பசுபிக் வலய வனப் பரம்பல் தொடர்பான ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் 34 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 300 பேர் இம்முறை இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்