உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2017 | 5:48 pm

தமது வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்றிரவு அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சட்ட மருத்துவ அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்க தெரிவித்தார்.

மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்கள் மீண்டும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஐந்தாவது நாளாக வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்