அர்ஜூன் அலோசியஸ் சிங்கப்பூர் செல்வதற்காக விடுத்திருந்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

அர்ஜூன் அலோசியஸ் சிங்கப்பூர் செல்வதற்காக விடுத்திருந்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

அர்ஜூன் அலோசியஸ் சிங்கப்பூர் செல்வதற்காக விடுத்திருந்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2017 | 7:55 pm

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் சிங்கப்பூருக்கு செல்வதற்காக விடுத்திருந்த கோரிக்கையை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று நிராகரித்தார்.

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு வௌிநாடு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இதற்கு முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தது.

வியாபார நடவடிக்கைக்காக அவசரமாக சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாக அரஜூன் அலோசியஸ் சட்டத்தரணியூடாக நீதிமன்றத்திற்கு நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வௌியாகியுள்ள தகவல்களுக்கமைய, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸூக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அவர் வௌிநாடு செல்ல எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

எதிர்ப்பை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அர்ஜூன் அலோசியஸ் வௌிநாடு செல்வதற்காக விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்தார்.

இதேவேளை, மத்திய வங்கியின் சிரேஷ்ட மேலதிக பணிப்பாளர் பதுமநாதன் அடிப்படை உரிமை மனுவொன்றை இன்று தாக்கல் செய்தார்.

மனுவில் சட்ட மா அதிபர், முறிகள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் நிதிச்சபையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய முறிகள் விநியோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதுமநாதன் மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் உதவி அத்தியட்சகராக செயற்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்