அரியாலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன

அரியாலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2017 | 6:59 pm

யாழ்ப்பாணம் – அரியாலை, உதயபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன.

அரியாலை – உதயபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த இளைஞர் காயமடைந்து, யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் அரியாலை மணியன் தோட்டத்தை சேர்ந்த 24 வயதான டொன் பொஸ்கோ றிக்மன் என்ற இளைஞனே உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ். உதயபுரம் மயானத்தில் நடைபெற்றன.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்