அரியாலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

அரியாலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

அரியாலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2017 | 7:25 am

யாழ். அரியாலை உதயபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான விசாரணகைள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விசாரணைகளுக்காக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

எனினும், துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான தடயவியல் உள்ளிட்ட அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் உள்ளக ரீதியில் அதிகளவு குருதி வெளியேறியுள்ளமையால் மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உதயபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் அரியாலை மணியன் தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதான டொன் பொஸ்கோ றிக்மன் வீட்டை விட்டு தனது நண்பனுடன் வௌியில் சென்றுள்ளார்.

நண்பண் நிசாந்தன் என்பவருடன் உதயபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் மோட்டார் சைக்கிளின் பின் புறமாக அமரந்து பயணித்துள்ளார்.

இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த பொஸ்கோ றிக்மன் படு காயமடைந்தார்.

அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்