பலாச்சேனை பகுதியில் தனது பிள்ளைகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது

பலாச்சேனை பகுதியில் தனது பிள்ளைகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது

பலாச்சேனை பகுதியில் தனது பிள்ளைகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2017 | 1:17 pm

மட்டக்களப்பு வந்தாறுமூலை பலாச்சேனை பகுதியில் தனது பிள்ளைகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய 32 வயதான சந்தேகநபர் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பத்து வயது மகளையும், 13 வயதான மகனையும் கடந்த ஒருவருடமாக குறித்த நபர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மகளும், மகனும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிள்ளைகளின் தாய் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தொழில் நிமித்தம் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது ஆசிரியருக்கு கடிதம் ஊடாக அறிவித்ததை அடுத்து பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்