மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2017 | 6:56 am

நாடளாவிய ரீதியில் 1070 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாளில் 9000 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 85 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலைக் காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலேயே டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புத்தளம், குருநாகல் ஆகிய பகுதிகளிலும் டெங்கு நுளம்புகள் பரவும் வீதம் ஓரளவு அதிகரித்துள்ளது.

மழைக் காரணமாக நீர்த்தேங்கும் பகுதிகளை தொடர்ந்தும் சுத்தப்படுத்துதல் வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்