புஸ்ஸல்லாவையில் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம்

புஸ்ஸல்லாவையில் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம்

புஸ்ஸல்லாவையில் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2017 | 1:08 pm

புஸ்ஸல்லாவையிலிருந்து பெரட்டாசி செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தி 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 21 கிலோமீற்றர் தூரமான வீதி இதுவரை புனரமைக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் டெல்டா சந்தியில் வீதியை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 2000 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸல்லாவ நகரிலுள்ள வர்த்தகர்களும் இணைந்துக் கொண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி, புஸ்ஸல்லாவை பிரதான வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்